விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி ரோட்டில் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கி, 25 ஆண்டுகள் நிறைவையொட்டி பள்ளி வளாகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, விவேகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் யசோதா, நிர்வாகி சஞ்சனா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகையில், நாம் வாழ்க்கையில் முன்னேற எதை தேடுகிறோமோ, அதில் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. நீங்கள் கண்காணிக்கிறீர்கள் என்பதை அந்த குழந்தைக்கு தெரியாமல் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.குழந்தைகள் நன்மைக்காக, ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என்பதை பெற்றோர் உணர வேண்டும் என்றார். விழாவில், திரளான பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.