உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரிகள் இடையே டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வென்றது வி.எல்.பி., அணி

கல்லுாரிகள் இடையே டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வென்றது வி.எல்.பி., அணி

கோவை : சி.எஸ்.கே.,- டி20 கிரிக்கெட் போட்டியில், வி.எல்.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடத்தை பிடித்தது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான சி.எஸ்.கே.,- 'டி20' கிரிக்கெட் போட்டி, ஐந்து நாட்கள் நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற போட்டியானது, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், வி.எல்.பி., கல்லுாரி அணியும் மோதின. பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 112 ரன்கள் எடுத்தது.வீரர் விஜய் அபிமன்யு, 34 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். அடுத்து விளையாடிய வி.எல்.பி., கல்லுாரி அணி, 16.2 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 113 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தது.மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியும் விளையாடின. பேட்டிங் செய்த கிருஷ்ணா அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 96 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக வீரர் ராம்பிரசாத், 31 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 13.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 100 ரன்கள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தது. வீரர் விஸ்வக், 41 ரன்களும், ஹரி சங்கர், 31 ரன்களும் எடுத்தனர்.வி.எல்.பி., கல்லுாரி வீரர் டேனியல் சிறந்த பவுலர் விருதையும், ராமகிருஷ்ணா வீரர் விஜய் அபிமன்யு சிறந்த பேட்ஸ்மேன் விருதையும், பி.எஸ்.ஜி., கல்லுாரி வீரர் ஹரிசங்கர், 'பிளேயர் ஆப் டோர்னமென்ட்' விருதையும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை