வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். வ.உ.சிதம்பரனார் திருவுருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் செந்தில், முன்னாள் மாவட்ட காங். பொருளாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் பஞ்சலிங்கம், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.