உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வ.உ.சி., பூங்கா பராமரிப்பு மோசம் செம்மொழி பூங்கா என்னாகுமோ

வ.உ.சி., பூங்கா பராமரிப்பு மோசம் செம்மொழி பூங்கா என்னாகுமோ

கோவை : முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், மாநகராட்சி பகுதி முழுவதும் செம்மொழி மாநாடு நினைவாக, பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அப்பூங்காக்கள் பராமரிப்பின்றி, படுமோசமாக இருக்கின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குளக்கரைகள் மேம்படுத்தும் திட்டம் துவக்கப்பட்டது. இவற்றின் ஒரு பகுதி மட்டுமே பராமரிப்பில் உள்ளன; மற்ற பகுதிகள் பயன்பாட்டில் இல்லாமல் காணப்படுகின்றன. இவ்வாறு மக்களின் வரிப்பணத்தில், பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பூங்காக்கள், மாநகராட்சியின் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால், பயன்பாடின்றி காணப்படுகின்றன. நகரின் நடுவே உள்ள, வ.உசி., பூங்காவின் நிலையும் இதேதான்.இச்சூழலில், ரூ.167.25 கோடி செலவழித்து, காந்தி புரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நினைவாக நகர் முழுவதும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பூங்காக்களின் பராமரிப்பே படுமோசமாக இருக்கும் சூழலில், தற்போது உருவாக்கும் பூங்கா எதிர்காலத்தில் என்னாகுமோ என்று, இப்போதே புலம்பத்துவங்கி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை