மேலும் செய்திகள்
மாநில கால்பந்து லீக் சென்னை அணி வெற்றி
22-Jun-2025
கோவை; மின் வாரிய ஊழியர்களுக்கான வாலிபால் போட்டியில், கோவை அணி மதுரை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கான, மண்டலங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் வரும், 5ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோவை, ஈரோடு, சென்னை உட்பட எட்டு மண்டலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இரண்டாம் நாளான நேற்று, பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த வாலிபால் முதல் அரையிறுதி போட்டியில் கோவை அணியும், மதுரை அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் கோவை அணி, 2-0 என்ற செட் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இரண்டாம் அரையிறுதியில், ஈரோடு அணியும், சென்னை அணியும் மோதின. இதில், ஈரோடு அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2-0 என்ற செட் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தனர்.அடுத்து, கிரிக்கெட் முதல் அரையிறுதியில் வேலுார் அணியும், மதுரை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த வேலுார் அணி, 20 ஓவரில், 121 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மதுரை அணி, 20 ஓவரில், 127 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.அதேபோல், டென்னிஸ் இறுதிப்போட்டியில், ஈரோடு அணி திருநெல்வேலி அணியை வென்று முதலிடம் பிடித்தது. டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி, ஈரோடு அணியையும் வென்று முதல் பரிசை தட்டியது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.
22-Jun-2025