மேலும் செய்திகள்
கிராமத்தில் கிரிக்கெட் போட்டி
19-Jan-2025
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) ரயான் டிவிஷன் பத்தாம்பாத்தி மைதானத்தில், மகாத்மா காந்தி மன்றத்தின் சார்பில், 51வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.போட்டியில், கோவை, திருப்பூர், கேரளா, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், வால்பாறை (சின்கோனா) காந்திமன்றம் அணியும், சேலம் எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், சேலம் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி, முதல் பரிசை தட்டி சென்றனர்.வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் பரிசு வழங்கினார். வால்பாறை கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் பிரமேஸ், த.வெ.க.,கட்சி தலைவர் ஆண்டூஸ், செயலாளர் செய்யதுஅலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Jan-2025