வால்டாக்ஸ் ரோடு பெயர் மாற்றம்: இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம்
கோவை; 'சென்னையில், 'வால்டாக்ஸ்' சாலையை, எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்திருந்தாலும், பழைய பெயரிலேயே அழைக்க வேண்டும்' என, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை: சென்னையில் நீண்ட ஆண்டுகளாகஅனைவராலும் அழைக்கப்பட்ட வால்டாக்ஸ் சாலையை, எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்து திறப்பு விழாநடத்தியது தமிழக அரசு. ஏற்கனவே, சென்னை கிரீன்வேஸ் சாலையை, கிறிஸ்துவ மத போதகர் டி.ஜி.எஸ்., தினகரன் சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளனர். பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய, திருச்சியை சேர்ந்த மறைந்தகிறிஸ்துவ மத போதகர் ஸ்டேன் சாமி பாதிரியாருக்கு, விராதனுாரில் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை பற்றி, இழிவாக கூறியவர் எஸ்றா சற்குணம். ஹிந்துக்கள் அனைவரையும் கிறிஸ்துவர்களாக மதமாற்றம் செய்வதற்கு கலவரத்தை துாண்டியவர். அவர் சார்ந்த மதத்துக்குஆதரவாகவும், பிற மதத்தை இழிவாகவும் பேசியவரின் பெயரை, பொது சாலைக்கு சூட்டுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சாலையை பழைய பெயரிலேயே அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.