உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் தூக்கிட்டு தற்கொலை ரத்த அழுத்தம் காரணமா

பெண் தூக்கிட்டு தற்கொலை ரத்த அழுத்தம் காரணமா

தொண்டாமுத்தூர் : குளத்துபாளையம், தாளியூர் ரோடு, எம்பரர் சிட்டியை சேர்ந்தவர் பார்த்திபன், 39. இவருக்கு திருமணமாகி ஷியாமளாதேவி,37 என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஷியாமளாதேவி, கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்த ரத்த அழுத்த நோயால், அவதிப்பட்டு வந்துள்ளார்.அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இருப்பினும், குறைந்த ரத்த அழுத்த நோய் தீராததால்,ஷியாமளாதேவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பார்த்திபன் வேலைக்கு சென்றபின், வீட்டில், ஷியாமளா தேவி, தனது மகளுடன் இருந்துள்ளார். சிறிது நேரத்தில், ஷியாமளாதேவி, மாடியில் உள்ள அறைக்கு சென்றுவிட்டார்.வெகுநேரமாகியும் தாய் கீழே வராததால், மகள் சென்று மாடியில் உள்ள, அறையின் கதவை திறக்க முயன்றபோது, உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மகள், அருகிலுள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷியாமளா தேவி தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.உடனடியாக, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை