நீரோடையில் கழிவு
பொள்ளாச்சி, பனிக்கம்பட்டி அருகே உள்ள நீரோடையில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் நீர் மாசுபடுகிறது. பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது. இத்துடன் அருகில் உள்ள விளை நிலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து நீரோடையில் உள்ள கழிவை அகற்ற வேண்டும். - மோகன்: சேதமடைந்த இருக்கை
கிணத்துக்கடவு, சோழனூர் பயணியர் நிழற்கூரையில், அமரும் இருக்கை சேதமடைந்துள்ளது. இதனால் பயணியர் அமர முடியாமல், திறந்தவெளியில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மழை, வெயில் காலத்தில் சிரமப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி இருக்கையை விரைவில் சீரமைக்க வேண்டும். - பெருமாள்: வீணாகும் அறிவிப்பு பலகை
நெகமம், ஆண்டிபாளையத்தில் ரோட்டோரம் சேதமடைந்த அறிவிப்பு பலகை நீண்ட நாட்களாக குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை ரோட்டின் முக்கிய இடத்தில் வைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -- கணேஷ்: ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி -- பல்லடம் ரோடு விஜயபுரம் அருகே, ரோட்டோரம் குப்பை கொட்டியும், அசுத்தம் செய்தும் வருகின்றனர். இதனால், அவ்வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- டேவிட்: பள்ளி அருகே புதர்
நெகமம், ஆண்டிபாளையம் அரசு பள்ளி சுற்று சுவர் அருகில் அதிகளவில் செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதனால், அங்கு விஷஜந்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதரை அகற்றம் செய்ய வேண்டும். -- ராஜ்குமார்: நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம்
உடுமலை - பழநி ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், அந்த ரோட்டில் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கணேசன்: சுரங்கப்பாதை சேதம்
உடுமலை தளி ரோடு ரயில்வே சுரங்கப்பாதை ரோடு, குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைநீரும் அதில் தேங்கி விடுகிறது. இதை சீரமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்: நிழற்கூரை வேண்டும்
போடிபட்டி முருகன் கோவில் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லை. இதனால் அங்கு பயணியர் திறந்தவெளியில் வெயிலில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சாமியப்பன்: கழிவுகளை அகற்றுங்க
உடுமலை செங்குளம் கரையில், குப்பை, மற்றும் கட்டட கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே, அங்கு குப்பை கொட்டுவோர் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாஸ்கர்: திறக்கப்படாத கழிப்பிடம்
உடுமலை புது பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடம் கட்டியும் திறக்கப்படமால் உள்ளது. இதனால், அங்கு பஸ் ஏற வரும் பயணியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கழிப்பிடத்தை திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ்: விதிமீறும் வாகனங்கள்
உடுமலை கச்சேரி வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக, நோ பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார்: