உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்

குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்

கோவை; மாநகராட்சி, 8வது வார்டு காளப்பட்டி, கொங்கு நகர், வீரியம்பாளையம் ரோடு, நேரு நகர் பகுதிகளில் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். சரியான முறையில் குப்பையை தரம் பிரிக்குமாறு அறிவுறுத்தினார். சீரான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். சரவணம்பட்டி, சர்ச் ரோடு பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டறிந்த கமிஷனர், சிக்கனத்தை கையாளுமாறு மக்களிடம் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி