உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் குழாய் உடைப்பு: மக்கள் அவதி

குடிநீர் குழாய் உடைப்பு: மக்கள் அவதி

மேட்டுப்பாளையம், ;தேக்கம்பட்டி ஊராட்சியில், இரண்டாவது வார்டுக்கு செல்லும், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில், வெல்ஸ்புரம் உள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலையில், தேக்கம்பட்டி ஊராட்சி இரண்டாவது வார்டுக்கு செல்லும், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வெல்ஸ்புரத்தில் இருந்து கதவணைக்குச் செல்லும் வழியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. குழாய் உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், அதை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே ஊராட்சி நிர்வாகம், உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ