உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலை ரூ.2 குறைப்பு வரத்தும் அதிகரிப்பு

இளநீர் விலை ரூ.2 குறைப்பு வரத்தும் அதிகரிப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 37 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இளநீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்சமயம் பண்டிகை காலத்தை ஒட்டி இளநீரின் தேவை அதிகரித்துள்ளது. தேங்காய் விலை நிலையாக இருப்பதன் காரணமாக, விவசாயிகள் இளநீரின் விலையை மிகவும் குறைத்து விற்க வேண்டாம். தற்போது, வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழையின் தாக்கம் குறைந்ததால், தேக்கம் அடைந்திருந்த இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரியோபைட் சிலந்திப்பூச்சி மற்றும் வெள்ளைப் பூச்சி தாக்குதலுக்கு உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். இல்லையெனில், இளநீரின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ