உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகமாபுதுார் பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வினியோகம்

நாகமாபுதுார் பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வினியோகம்

அன்னுார்; நான்கு வழிச்சாலைக்காக, குழாய் அகற்றப்பட்ட பகுதிகளில், லாரியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக, மேட்டுப்பாளையம் வரை, 238 கோடி ரூபாயில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அவிநாசி சாலையில், குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு விட்டன. இதையடுத்து நாகமாபுதுார், குன்னத்துாராம்பாளையத்தில், 40 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட தொலைவு சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.இதையடுத்து பேரூராட்சி சார்பில், 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் லாரி வாயிலாக நாகமாபுதுார், காமராஜ் நகர், குன்னத்துாராம் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 40 நாட்களுக்குப் பிறகு குடிநீர் வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.'குழாய் சரி செய்யப்படும் வரை தினமும் லாரியில் குடிநீர் வினியோகிக்கப்படும்,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ