உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கேரளாவுடன் இணைந்து செயல்படுகிறோம்; எஸ்.பி.

 கேரளாவுடன் இணைந்து செயல்படுகிறோம்; எஸ்.பி.

மேட்டுப்பாளையம்: காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருடு போன செல்போன்கள் மீட்கப்பட்டு, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று காரமடை போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்றது. கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், 30 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, காரமடை நகர் பகுதிகளில், பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 23 புதிய சி.சி.டி.வி., கேமராக்கள் பயன்பாட்டையும் துவக்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்ட எல்லை, கேரளாவுடன் நீண்ட தொடராக பகிர்ந்து கொள்வதால், மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் ஹவாலா பணம் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க, கேரளா மற்றும் தமிழ்நாடு போலீஸ் இணைந்து செயல்படுகிறோம். எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாவட்ட எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர், கோவைக்கு வந்து எங்களுடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலப் போலீசாரும், இணைந்து செயல்படுவதால், குற்றங்கள் தடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை