உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கை ரேகை காணோம்; ரேஷன் வாங்க சிரமம்

கை ரேகை காணோம்; ரேஷன் வாங்க சிரமம்

கோவை; 'மதுக்கரை வட்டத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள், ரேஷனில் பொருட்கள் வாங்கும்போது, பி.ஓ.எஸ்., கருவியில் கைரேகை பதிவு விழுவதில்லை மாற்று ஏற்பாடு செய்து, பொருட்கள் வழங்க வேண்டும்' என, மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் சக்திவேல், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதன் விவரம்: மதுக்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும், உடல் உழைப்பு தொழிலாளர்கள். ரேஷன் கடை பொருட்களையே பெரிதும் நம்பியுள்ளனர். மூத்த குடிமக்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது, பெரும்பாலானவர்களின் கைவிரல் ரேகை பி.ஓ.எஸ்., கருவியில் பதிவாவதில்லை. பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். மாற்று ஏற்பாடு செய்து, பொருட்கள் வழங்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன. அனைத்து நாட்களும் திறக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி