உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய நிலங்களுக்கு செல்ல சர்வீஸ் ரோடு வேண்டும்

விவசாய நிலங்களுக்கு செல்ல சர்வீஸ் ரோடு வேண்டும்

சூலுார்: 'விமான நிலைய விரிவாக்கத்துக்கு, ரோடு ஆர்ஜிதம் செய்யப்படுவதால், சர்வீஸ் ரோடு வேண்டும்,' என, சின்னியம்பாளையம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக, சின்னியம்பாளையம் கிராமத்தில், 80 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இதில், விவசாய நிலங்கள், குடியிருப்புகளும் அடக்கம். மேலும், சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் ரோடும் ஆர்ஜிதப்படுத்தப்பட உள்ளது. இதனால், ஊருக்கு தென்புறம் உள்ள கிருஷ்ண கவுண்டர் நகர், ஆர்.எஸ்., நகர், சுப்பையா நகர், ராமசாமி கவுண்டர் நகர் மற்றும் தோட்டத்து சாளைகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கும், விளைநிலங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகும். அதனால், நிலத்தை முழுமையாக கையகப்படுத்தும் முன், குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கு செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வேண்டும். அரசு எடுக்கும் நிலத்திலேயே சர்வீஸ் ரோடும் அமைத்து தரவேண்டும், என, விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி