உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைத்து ஜீவன்களிடமும் அன்பு காட்ட வேண்டும்

அனைத்து ஜீவன்களிடமும் அன்பு காட்ட வேண்டும்

கோவை:கோவையில் உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், வள்ளலார் பிறந்தநாள் விழா, கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நேற்று நடந்தது. உலகத் தமிழ் நெறிக்கழக செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். விழாவில், 'திருஅருட்பா' பாராயணம் மற்றும் சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலகத் தமிழ் நெறிக்கழக துணைத்தலைவர் வள்ளியப்பன் பேசுகையில், ''வள்ளலார் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை முறையையும், போதனைகளையும் பின்பற்றினால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கும். அனைத்து ஜீவன்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும் என்ற ஜீவகாருண்ய சிந்தனையை, மக்களுக்கு உபதேசித்தார். இன்று, திசை மாறி செல்லும் இளைய தலைமுறையினர், வள்ளலார் காட்டும் வழியில் சென்றால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்,'' என்றார். புதுச்சேரி அன்னபூரணி அம்மாள் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.உலகத் தமிழ் நெறிக்கழக நிர்வாகிகள் ரமேஷ், மாணிக்கவாசகம், இருகூர் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை