உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்

 மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்

கோவை: ''அடுத்து வரும் தேர்தலில், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளாவில் தே.ஜ.,கூட்டணி அமோக வெற்றி பெறும், என, பா.ஜ., தமிழ்நாடு துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் பழனிச்சாமி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெறும்.மேற்கு வங்கம், கேரளாவிலும் தே.ஜ., கூட்டணி வெல்லும். தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியில் ஊழல், மணல் கடத்தல், குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. தஞ்சாவூரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்களின் பாதிப்பை கேட்டறிந்தேன். மாநில அரசு மீது அவர்கள் கோபம் கொண்டுள்ளனர். வரும் தேர்தல் தே.ஜ., கூட்டணிக்கு இது சாதகமாக இருக்கும். பிரதமர், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டு முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ