உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோவை,; கோவை மேட்டுப்பாளையம் ரோடு, டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில், நேற்று சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காலையில் ஹோமத்துடன் துவங்கிய பூஜையில் விக்னேஸ்வரா பூஜை, கலச பூஜை, சதுர்வேத பாராயணம் செய்யப்பட்டன.பின், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மதுரை வீரன், வெள்ளையம்மாள்- பொம்மியம்மாள், சுவாமிகளுக்கு திருமாங்கல்யம் சார்த்தும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் மங்கள தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்பட்டது. அதை பெண்கள் சுவாமி முன்பு கழுத்தில் அணிந்து கொண்டனர். இரவு பூஜையில் பங்கேற்ற, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ