உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னுார்: அன்னுார் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னுார் மாரியம்மன் கோவிலில், 35ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி மாலை கம்பம் நடப்பட்டு, பூவோடு எடுக்கப்பட்டது.கடந்த 11ம் தேதி வரை, தினமும் இரவு பூவோடு எடுத்தல் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் அணி கூடை எடுத்து வந்தனர்.நேற்று அதிகாலை பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் பூவோடு எடுத்து வந்து சமர்ப்பித்தனர். காலை 10:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் துவங்கி, மதியம் 12:30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை பொங்கல் வைத்தலும், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் நடக்கிறது. இரவு கம்பம் கலைக்கப்படுகிறது. நாளை (15ம் தேதி) காலை அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீர் உற்சவமும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை மறுபூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ