உள்ளூர் செய்திகள்

 வாரவாரம் ஆரவாரம்

சிரிப்பு எனும் மந்திரசாவி தாமரைக்கோவில் சார்பில், 93வது மாதந்திர கூட்டம், சொற்பொழிவு நிகழ்வு சிரிப்பு எனும் மந்திரசாவி என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. பேரூர் ஆதினம் தமிழ் கல்லுாரி பேராசிரியர் பிரேம் கண்ணதாசன் சொற்பொழிவாற்றவுள்ளார். தேதி: 15 இடம்: தாமரைக்கோவில்: நேரம்: மாலை: ஏ.ஐ., எதிர்காலம் பாரதியார் பல்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ஏ.ஐ., திறன் மேம்பாடும் எதிர்கால வாய்ப்புகளும் என்ற கருவை மையமாக கொண்டு, வல்லுநர் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு துறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்தும் மாணவர்களின் வாய்ப்புகள், மேம்படுத்திக்கொள்ள திறன்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. தேதி: 13. இடம்: பாரதியார் பல்கலை அரங்கு: டிஜிட்டல் மாற்றம் பாரதியார் பல்கலை ஆங்கிலம் மற்றும் அயல்மொழியியல் துறை சார்பில், 'ஆங்கிலம் அறிவோம் 2.0' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. நவீன டிஜிட்டல் உலகில் ஆங்கில இலக்கியம், மொழியியல் எவ்வாறு மாறியுள்ளது என்பது மையமாக வைத்து நிகழ்வு நடைபெறவுள்ளது. பல்வேறு வல்லுநர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். தேதி: 17: இடம்: பாரதியார் பல்கலை: நேரம்: காலை: ஸ்டைல் பஜார் லைப் ஸ்டைல் மற்றும் ஷாப்பிங் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பெண்கள், குழந்தைகள் தேவையான ஆடைகள், நகைகள் போன்ற பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிச்செல்லலாம். அனுமதி இலவசம். தேதி: 14: நேரம்: காலை: கோ - கிளாம் ஆடைகள், ஆபரணங்கள் பெண்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை ஒரே இடத்தில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் கோடைக்காலத்திற்கான சிறப்பு விற்பனையாக கோ-கிளாம் கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். தேதி: 13: இடம்: சுகுணா கல்யாண மண்டபம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !