முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
* சரவணம்பட்டி, பி.பி.ஜி., தொழில் நுட்ப கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமர்சையாக நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி பிச்சாண்டி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், '' கல்லுாரி காலத்திலேயே பன்முக திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சுய முன்னேற்றம் மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்திற்கும் பொறியியல் கல்வியை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.பி.பி.ஜி., கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் அக்சய், தாளாளர் சாந்தி, அஸ்வின் மருத்துவமனை இயக்குனர் அஸ்வின், பி.பி.ஜி., தொழில் நுட்ப கல்லுாரியின் முதல்வர் நந்தகுமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.