கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு
கோவை : கற்பகம் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு வரவேற்பு நிகழ்வு, 'யுவா-2024' இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று நடந்தது. முதல்வர் குமார் சின்னையன் தலைமை வகித்தார். பேச்சாளர் மயிலிறகு சுந்தரராஜன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், மேம்படுத்திக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில், கற்பகம் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்தகுமார், இயந்திர பொறியியல் துறைத்தலைவர் ரவிக்குமார், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் ராஜேஸ்வரி, ஏ.ஐ., துறைத்தலைவர் கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.