உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை ; கே.எம்.சி.எச்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, பார்மசி, நர்சிங், பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகியவற்றில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரியில் உள்ள வசதிகள், கல்வி நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.கே.எம்.சி.எச்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்ல பழனிசாமி, இளம் மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.டாக்டர் என்.ஜி.பி., ஆர்.இ.டி., நிர்வாக அறங்காவலர் தவமணி, உலகம் முழுவதுமுள்ள சுகாதார அறிவியலுக்கான வாய்ப்புகளை வலியுறுத்தினார்.என்.ஜி.பி.ஆர்.இ.டி., சி.இ.ஓ., புவனேஸ்வரன், கே.எம்.சி.எச்., மருந்தியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகரன், செவிலியர் கல்லுாரி முதல்வர் மாதவி, பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் கார்த்திக் பாபு, தொழில் சிகிச்சை கல்லுாரி முதல்வர் பிரவீன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ