மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வரவேற்பு விழா
13-Jun-2025
கோவை; பி.பி.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் 'சுஸ்வாகதம் 2025' விழா நடந்தது. பி.பி.ஜி., குழும தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், ''தம் வாழ்விற்கான உயர்ந்த இலக்குகளை மாணவர்கள் உருவாக்கி, அதை அடைய அயராது உழைக்க வேண்டும்,'' என்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன், 'உள்ளத்தனையது உயர்வு' என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.பி.பி.ஜி., கல்விக்குழுமத் துணைத்தலைவர் அக் ஷய், டாக்டர் அஸ்வின், தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன், பி.பி.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
13-Jun-2025