மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
31-Jul-2025
கோவை; கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கற்பகம் கல்வி குழுமத்தின் நிறுவனர் வசந்த குமார் பேசுகையில், ''திருக்குறள் தான் மனித வாழ்வை மேம்படுத்தும். தினமும் திருக்குறள் கற்க வேண்டும். எந்த துறையில் கல்வி பயின்றாலும், அந்த துறையில் சாதிக்க வேண்டும்,'' என்றார். முன்னதாக, கல்லுாரி முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., டேட்டா இ.எக்ஸ்.எல்., நிறுவனத்தின் உதவித் துணைத் தலைவர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
31-Jul-2025