மேலும் செய்திகள்
கட்டுரை போட்டி பரிசளிப்பு
15-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் ஒளி ஆலயம் சேவா அறக்கட்டளை வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கான ஐம்பெரும் விழா, விஜயபுரம் ரோட்டரி அரங்கில் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ்சந்திரன், செயலாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒளி ஆலயம் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரம், அருள்முருகு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், தையல்மெஷின், கிரைண்டர் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
15-Oct-2025