பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பழங்குடியின மக்களுக்கு கருப்புசாமி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி கருப்புசாமி அறக்கட்டளை சார்பில், ஏழாவாது ஆண்டாக சர்க்கார்பதி, நாகரூத்து பழங்குடியின மக்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி டார்ச் லைட், புத்தாடைகள், புத்தகங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை அறங்காவலர்கள் விக்னேஷ், ராஜேஷ் பிரபு, நாகநந்தினி, திட்ட இயக்குனர் கமலக்கண்ணன், சுவாதி அறக்கட்டளை அறங்காவலர் சாந்த மீனாள், குழு உறுப்பினர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 100 பழங்குடியின குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.