நலவாரிய ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க கெடு
கோவை; அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியதாரர்கள், ஆயுள் சான்றை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு பெற்ற 60 வயது நிறைவடைந்த, 21 ஆயிரத்து 334க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள், 2025-26ம் ஆண்டுக்கான தங்களது ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களுடன் https://tnuwwb.tn.gov.inஎன்ற தளத்தில் பதிவேற்றி, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆதார், ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகர், ஆயுள் சான்று படிவம், 1 போட்டோ, வங்கி பாஸ் புத்தம், ஓய்வூதியதாரரின் நேரடி புகைப்படம் ஆதார் அட்டையுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.