உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களின் கற்றல் திறன் எப்படியிருக்கு! உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு

மாணவர்களின் கற்றல் திறன் எப்படியிருக்கு! உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் வருகை மற்றும் கற்றல் திறனை கண்டறிந்து உறுதிப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், அனைத்து மாணவர்களும் அடுத்தடுத்து வகுப்புக்கு முன்னேறி விடுகின்றனர்.இதனால், பல மாணவர்கள், குறைந்தபட்ச கற்றல்திறன் கூட இல்லாமல் உள்ளனர். பத்தாம் வகுப்புக்கு முன்னேறி வந்ததும், சிலருக்கு தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரியாத நிலை உள்ளது.தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர். இதற்கு, தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் கற்றல் திறனை உறுதிப்படுத்தாமல் இருப்பதே காரணம், என, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:தமிழ் மொழியை சரளமாக வாசிக்கத் தெரியாமல் திணறும் மாணவர்கள், கணிதம் உள்ளிட்ட பிற பாடங்களைப் படிப்பதும் கடினமாகும். இது, பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதற்கு, தொடக்கப் பள்ளிகளில் அவர்களின் கற்கும் திறனை உறுதிப் படுத்தாமல் இருப்பதும் காரணமாகும். தொடக்கப்பள்ளிகளில், மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்த வேண்டும். 'ஆல்பாஸ்' காரணமாக, சில மாணவர்கள் ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வந்து, முழு ஆண்டு தேர்வை எதிர்கொள்வதும் உண்டு.ஆசிரியர்கள் வற்புறுத்தி அவர்களை பள்ளிக்கு வரவழைக்க முயற்சித்தாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. தொடக்கப் பள்ளிகள்தோறும், ஒவ்வொரு மாணவரையும் தமிழை பிழையின்றி எழுதவும், வாசிக்கவும் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை