உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறும்படமாக உருவானது வாகா... பார்த்தவர்கள் சொன்னது ஆகா

குறும்படமாக உருவானது வாகா... பார்த்தவர்கள் சொன்னது ஆகா

ஒ வ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு படைப்பாற்றல் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. அதை வெளிக்கொணர்ந்தால், அவர் படைப்பாளி. 'தெரியாதது கூட தெரிந்து விடும்; சில தவறுகள் நமக்கு பாடம் ஆகும் போது' என்று சொல்கிறார், அன்னுாரை சேர்ந்த படைப்பாளி தனபால். நன்றாக பாட வரும். அதை அப்படியே வைத்திருந்தால் எப்படி என்று யோசித்து, நன்றாக பாடக்கூடியவர்களை இணைத்து, பாடகர் குழுவை ஏற்படுத்துகிறார். கோவை, மேட்டுப்பாளையம், திண்டுக்கல், ஈரோடு, ஊட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நடக்கும் விழாக்களில், குழுவினர் பங்கேற்று வருகின்றனர். 2015ல் துவங்கிய பயணம், இப்போதும் தொடர்கிறது. 2023ல் இவருடைய எழுத்து, இயக்கத்தில் உருவான வாகா' என்ற குறும்படத்தை பார்த்தவர்கள், 'அட... இவருக்குள் இப்படி ஒரு திறமையா' என்று வியக்க வைத்தார். இந்த படம் புத்துணர்ச்சி கொடுக்க, அடுத்தது இவருடைய கதை, எழுத்தில் உருவான அன்றில்' என்ற குறும்படம் வெளியானது. கைகூடாமல் போன காதல், அதன் நினைவலைகள் குறித்து எடுத்துள்ள குறும்படம், காதலில் சிக்குண்ட ஒவ்வொருவரின் கதையாக இருக்கிறது. வாழ்க்கையின் அழகிய வடிவம், காதல் என்று சொல்லலாம். சிலருக்கு ஜெயிக்கும். சிலருக்கு காயம் ஏற்படுத்தும். இருந்தாலும், காதலை அழிக்க முடியாது. இந்த எண்ணத்தில் உருவானது, எல்லோருக்கும் பிடிக்கும். அடுத்தடுத்து இன்னும் சில திட்டங்கள் இருக்கிறது,'' என்கிறார் தனபால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி