மேலும் செய்திகள்
அமைச்சருக்கு கூச்சமில்லையா: அண்ணாமலை ஆவேசம்
15-Feb-2025
பொள்ளாச்சி; தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், என, மொத்தம், 13,211 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.இங்கு, நோயாளிகளின் நலன் கருதி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரம், மருத்துவப் பணிகள் இயக்குநர், 'டெலிகிராம்' குழு அமைத்து, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் நிகழும் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளை, பதிவிடச் செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:மருத்துவப் பணிகள் இயக்குநரின் 'டெலிகிராம்' குழுவில், ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அலுவலர், செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர், தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவர்.இவர்கள், அந்தந்த மருத்துவமனையில் உள் மற்றும் புறநோயாளிகள் பெறும் வழக்கமான சிகிச்சை தவிர்த்து, இதர செயல்பாடுகளை தினமும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பதிவிட வேண்டும்.குறிப்பாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணி, தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் கண்காணிப்பாளரின் ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
15-Feb-2025