உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்

 உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்

உக்கடம்: உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை கட்டியுள்ள மேம்பாலத்தில் பாலக்காடு ரோடு, போத்தனுார் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வருவோர் பயணிக்கின்றனர். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வருவோர், மேம்பாலத்தை தவிர்த்து சாலை மார்க்கமாகவே செல்கின்றனர். உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை, ரோட்டின் இடதுபுறத்தில் மழை நீர் வடிகால் மீது போட்டுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான தள்ளுவண்டி கடைகள் நடத்தப்படுகின்றன. நாளுக்கு நாள் கடைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. பொருட்கள் வாங்க வருவோர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வரும்போது, 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது. ஆக்கிரமிப்பை போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். நாளடைவில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அதேயிடத்தில் நிரந்தரமாகி விட்டால், அகற்றுவது இயலாத காரியமாகி விடும். ஆரம்பத்திலேயே அவற்றை அனுமதிக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்த இரு அரசு துறையினரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்