கிராம நுாலகங்களுக்கு விடியல் எப்போது
கோவை; காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாய் அமையவிருக்கும் கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தை வரவேற்றுள்ள வாசகர்கள், உரிய பாரமரிப்பின்றி செயல்படாமல் உள்ள கிராமப்புற நுாலகங்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வாசகர் வட்ட தலைவர் லெனின் பாரதி கூறியதாவது:கிராமப்பகுதி மாணவர்கள், பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்,கடந்த 2006ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமப்புற நுாலகங்கள் அமைக்கப்பட்டது.கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த நுாலகங்கள், ஊராட்சிகளில் போதிய நிதியின்மை மற்றும் உரிய பாரமரிப்பு இல்லாமல் செயல்படாமல் உள்ளது. பல்வேறு ஊராட்சிகளில் நுாலகங்கள் பல மாதங்களாக பூட்டப்பட்டு, புதர்மண்டி கிடக்கிறது. பலகோடி மதிப்பில் வாங்கிய விலை மதிப்பற்ற புத்தகங்கள் பயன்பாடிற்றி வீணாகி வருகிறது. இந்த நுாலகங்களை பாரமரிக்க போதுமான நிதி ஒதுக்கி, நேரிடையாக தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறையின் கீழ் இயங்க வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.