உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊக்கத்தொகை எப்போது கிடைக்கும்

ஊக்கத்தொகை எப்போது கிடைக்கும்

அன்னுார் : ஊக்கத்தொகை எப்போது கிடைக்கும், என பால் உற்பத்தியாளர்கள் இரண்டு மாதங்களாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தினமும் ஆவின் நிறுவனம் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆவினுக்கு பால் சப்ளை செய்து வருகின்றனர். தீவனம் விலை அதிகரிப்பு, தொழிலாளி கூலி உயர்வு ஆகியவற்றால் பால் உற்பத்தி கட்டுபடியாவதில்லை.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு ஆவினுக்கு வழங்கப்படும் பாலுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தது. எனினும் இந்த தொகை மிக தாமதமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் வழங்கப்பட்ட பாலுக்கு கோவை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை