மேலும் செய்திகள்
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்
18-Mar-2025
தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவிவிடுகின்றன. எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை, தோட்டக்கலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துவிட்டது. இதனால், 50 சதவீதம் அளவுக்கு மகசூல் குறைந்து விட்டது. மகசூல் குறைவால், கூட்டுறவு விற்பனை கூடங்களுக்கு கொப்பரை வரத்து குறைந்திருக்கிறது; அதே நேரம், கொப்பரைக்கான தேவை மற்றும் சந்தை இருப்பதால், வர்த்தகர்கள் போட்டி, போட்டு விலையை உயர்த்தி, கொப்பரை கொள்முதல் செய்கின்றனர்.இதுதான், கொப்பரை விலை உயர்வுக்கு காரணமே தவிர, விளைச்சல் அதிகரிப்பு காரணமல்ல. உதாரணமாக, 100 கொப்பரையை மகசூலாக பெற்ற விவசாயி, 50 கொப்பரைகளை மட்டுமே மகசூலாக எடுக்கின்றனர். அதன்படி, கொப்பரைக்கு கிடைக்கும் விலை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைவாகவோ அல்லது சரி சமமாகவோ தான் இருக்கும். தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவிவிடுகின்றன. எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை, தோட்டக்கலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார். - நமது நிருபர் -
18-Mar-2025