உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.பி.ஏ.ஏ., 25 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யார் சாம்பியன்?

ஐ.பி.ஏ.ஏ., 25 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யார் சாம்பியன்?

கோவை; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி'(ஐ.பி.ஏ.ஏ.,) கிரிக்கெட் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. 11 டிவிஷன் அணிகள் பங்கேற்றன.பல்வேறு போட்டிகளை அடுத்து, பி.எஸ்.ஜி., டெக் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும்(வேலுார்), கே.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரி அணியும்(ஈரோடு) மோதின. பேட்டிங் செய்த கே.எஸ்.ஆர்., அணி, 25 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 116 ரன்கள் எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த ராஜகோபால் கல்லுாரி அணியினர், 24.5 ஓவர்களில், 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியும்(கோவை), ஏ.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியும்(மதுரை) மோதின.முதலில் பேட்டிங் செய்த, ஏ.ஜி., பாலிடெக்னிக் அணியினர், 25 ஓவர்களில், 8 விக்கெட்டுக்கு, 123 ரன்கள் எடுத்தனர்.அடுத்து விளையாடிய நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 124 ரன்கள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை