உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளக்ஸ் பேனரால் அதிருப்தி அப்புறப்படுத்த தயக்கம் ஏன்?

பிளக்ஸ் பேனரால் அதிருப்தி அப்புறப்படுத்த தயக்கம் ஏன்?

வால்பாறை: வால்பாறையில் அதிகரித்து வரும் பிளக்ஸ் பேனர்களால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். வால்பாறை நகரம் குறுகலான ரோட்டில் அமைந்துள்ளது. பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக, அரசு கல்லுாரியின் முன்பக்கம், காந்திசிலை, கண்ணாடி மாளிகை, அண்ணாசிலை உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள் சார்பில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி ரோட்டில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்ககூடாது என, அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாது: சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், கோர்ட் உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ