உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிகார கணவனை மிரட்ட நடித்த மனைவி மரணம்

குடிகார கணவனை மிரட்ட நடித்த மனைவி மரணம்

கோவை: வேலாண்டிபாளையம் பகுதியில் கணவனை மிரட்டுவதற்காக, துாக்கு போட்டு கொள்வது போல் நடித்த பெண், கழுத்தில் துப்பட்டா இறுக்கி பலியானார். வேலாண்டிபாளையம், மருது கோனார் வீதியை சேர்ந்தவர், ஐயப்பன்; இவரின் மனைவி பரமேஸ்வரி, 33. ஐயப்பன் மதுவுக்கு அடிமையாகி, தினமும் குடித்து வந்தார். வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து, குடித்து விட்டார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பரமேஸ்வரி, துாக்கு மாட்டிக்கொள்ளப்போவதாக மிரட்டினார். துப்பட்டாவால் துாக்கு மாட்டிக்கொள்வது போல் நடிக்க முயற்சித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்தை, துப்பட்டா இறுக்கியதில் உயிரிழந்தார்.வீட்டு உரிமையாளர் முருகேசன், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை