உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை

கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேணுகாபுரம் பகுதியில் காட்டு யானை, தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கால்நடை தீவனங்களை ருசித்து சாப்பிட்டது. கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், இதுவரை காட்டு யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அங்குள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரேணுகாபுரத்தில் தோட்டத்தில் ஆடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை ஒற்றை யானை தின்றது. மறுநாளும் அதே பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை