உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் கோவில், வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நள்ளிரவில் கோவில், வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை; வால்பாறையில், கோவில் மற்றும் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.வால்பாறை அருகே, மளுக்கப்பாறை வழியாக பன்னிமேடு எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில், நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டமாக முகாமிட்டன. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் முகாமிட்ட யானைகள், அங்குள்ள மாரியம்மன் கோவிலை சேதப்படுத்தியது.அதன்பின், தோட்ட அதிகாரியின் வீட்டையும் இடித்து பொருட்களையும் வெளியே இழுத்து சேதப்படுத்தின. நள்ளிரவு நேரம் என்பதால், தொழிலாளர்கள் யானையை விரட்ட முடியாமல் பரிதவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து பரிதவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை