மேலும் செய்திகள்
கடைகளை சேதப்படுத்திய ஒற்றை யானையால் அச்சம்
16-Oct-2025
வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, குரங்குமுடி சிவா காபி எஸ்டேட், பச்சமலை, உருளிக்கல், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் கீழ் பிரட்டு எஸ்டேட் பகுதியில், நேற்று அதிகாலை முகாமிட்ட யானைகள், அங்குள்ள பூமாரியம்மன் கோவிலின் நுழைவுவாயில் மற்றும் பின்புறம் உள்ள குடோனை இடித்து சேதப்படுத்தின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
16-Oct-2025