உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வறட்சியால் வறண்ட நீர்நிலைகள்; அலைமோதும் வனவிலங்குகள்

வறட்சியால் வறண்ட நீர்நிலைகள்; அலைமோதும் வனவிலங்குகள்

வால்பாறை; வால்பாறையில் வறட்சி நிலவி வரும் நிலையில், தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.வால்பாறையில் கடந்த மூன்று மாதங்களாக காலை, மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயிலும் நிலவி வருகிறது. இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.வால்பாறையில் உள்ள சிற்றருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், வனவிலங்குகள் குடிநீருக்காக இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக, குடிநீரை தேடி பகல் நேரத்தில் யானைகள் வெளியே செல்வதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். சில நேரங்களில் பகல் நேரத்தில் கூட யானைகள் ரோட்டை கடப்பதால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் போதிய அளவு உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தணிக்க, 10 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.யானைகள் பகல் நேரத்தில் தான் குடிநீரை தேடி செல்லும் என்பதால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பணிபுரியும் எஸ்டேட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை