மேலும் செய்திகள்
அதிக பாரத்தால் விபத்து அபாயம்
03-Feb-2025
நெகமம்; நெகமம், பனப்பட்டி - மெட்டுவாவி ரோடு சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.நெகமம் அருகே உள்ள, பனப்பட்டியிலிருந்து மெட்டுவாவி செல்லும் ரோட்டை, பெரும்பாலும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த ரோடானது வாகனங்கள் இயக்க தகுதி இல்லாத நிலையில் உள்ளது.மேலும், இவ்வழியில் பயணம் செய்யும்போது, பைக் ஓட்டுநர்கள் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி வாகனமே பழுதாகிறது.ரோட்டில் கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் இந்த ரோடு சேறும் சகதியுமாக இருப்பதால், வாகனத்தில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
03-Feb-2025