உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் மயானம் மேம்படுத்தப்படுமா?

மின் மயானம் மேம்படுத்தப்படுமா?

அன்னுார்,; அன்னுார் நவீன மின் மயானத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னுாரில் 4.50 கோடி ரூபாயில் நவீன மின் மயானம் அமைக்கப்பட்டு 2023 ஆக. 1 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு பர்னர் மட்டுமே உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'மின் மயானம் சார்பில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. எனினும் சில நேரங்களில் ஒரே நாளில் ஆறு உடல்களுக்கு மேல் வரு வதால் இறுதிச் சடங்கு செய்ய காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, இப்போதுள்ள மின் மயானத்தில் மேலும் ஒரு பர்னர் அமைக்க வேண்டும். இதனால் இறுதி சடங்குக்கு அதிக நேரம் காத்திருக்க தேவை இருக்காது,' என்றனர். இதுகுறித்து மின்மயான அறக்கட்டளை தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், 'மேலும் ஒரு பர்னர் அமைக்க, 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பொதுமக்கள் நன்கொடை அளித்தால் அரசிடம் 'நமக்கு நாமே' திட்டத்தில் மேலும் ஒரு பர்னர் அமைக்கலாம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை