உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருந்துக்கடைகளில் மருத்துவம் நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை

மருந்துக்கடைகளில் மருத்துவம் நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை

கருமத்தம்பட்டி,; கருமத்தம்பட்டி பகுதியில், விதிகளை மீறி, ஒரு சில மருந்து கடைகளில் மருத்துவம் பார்ப்பதாகவும், சுகாதாரத்துறை அலட்சியமாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.கருமத்தம்பட்டி, சூலூர் பகுதியில், 50 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒரு சில மருந்து கடைகளில், விதிகளை மீறி மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:அரசு விதிகள் படி மருந்துக்கடைகளில் மருந்துகள் மட்டுமே விற்க வேண்டும். டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை கொடுக்க வேண்டும். ஆனால், கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு சில மருந்து கடைகள் கிளினிக் போல் செயல்படுகின்றன. இருமல், சளி, காய்ச்சலுக்கு மருந்து கேட்டு வருவோரிடம், மருந்து சாப்பிட்டால் சரியாகாது; ஊசி போட்டு கொள்ளுங்கள் எனக்கூறி, கடை உரிமையாளரே ஊசி போடுவது அதிகரித்துள்ளது. இது தற்போது, கடைக்கு கடை நடக்கிறது. அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டிய சுகாதாரத்துறையினர் அலட்சியமாக உள்ளனர். டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் கொடுக்க கூடாது என்ற நிலையில், மருத்துவமே படிக்காமல், மக்களின் அறியாமையை பயன்படுத்தி, விதிகளை மீறி ஊசி போடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன், அத்துமீறும் மருந்து கடைக்காரர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை