உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரக்கு வாகனத்தில் இருந்து கம்பிகள் ரோட்டில் சரிந்தது

சரக்கு வாகனத்தில் இருந்து கம்பிகள் ரோட்டில் சரிந்தது

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நேற்று சரக்கு வாகனத்தில் பாதுகாப்பின்றி எடுத்துச் சென்ற கம்பிகள் சரிந்து விழுந்ததால், வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், மேம்பாலத்தில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சரக்கு வாகனத்தில், பெரிய கம்பிகளை ஏற்றி சென்றனர்.திடீரென வாகனத்தில் இருந்து கம்பிகள் சரிந்து ரோட்டில் விழுந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் கம்பி விழாததால் பாதிப்பு ஏற்படவில்லை. வாகனங்களை ஒதுக்கிச் செல்ல முற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'சரக்கு வாகனங்களில், விதிமுறை மீறி பாதுகாப்பின்றி கம்பிகள், பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமாகியுள்ளது. பெரிய வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டிய கம்பிகளை, சிறு சரக்கு வாகனங்களில் கட்டிச் செல்வதால் அவை ரோட்டில் சரிவது தொடர்கதையாகியுள்ளது.இரும்பு பொருட்களை எடுத்துச் செல்வோர் முறையாக கம்பிகளை கட்டி, உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும்.இதுபோன்று விதிமுறை மீறி எடுத்துச் செல்லும் போது, அவை கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, இதுபோன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி