மேலும் செய்திகள்
கால்வாயில் இறந்து கிடந்த வாட்ச்மேன்
14-Aug-2025
கோவை; நீலிக்கோணாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி, 73. சில நாட்களுக்கு முன், சூலுாரில் உள்ள தனது மகளை பார்த்து விட்டு, தனியார் பஸ்ஸில் கோவை வந்து கொண்டிருந்தார். அவர் அருகில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர், லட்சுமி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினின் கொக்கி கழன்று இருப்பதாக தெரிவித்தார். செயினை கழட்டிய லட்சுமி தனது பையில் உள்ள பர்ஸில் வைத்தார். ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி, பர்ஸை சோதனையிட்டபோது, அதில் இருந்த செயின் மாயமாகியிருந்தது. பஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண், செயினை திருடியது தெரிந்தது. ராமநாதபுரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நகையை திருடியது நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த நதியா, 38 எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.
14-Aug-2025