மேலும் செய்திகள்
கார், பைக் மீது ஆம்புலன்ஸ் மோதல்
26-May-2025
கோவை; கவுண்டம்பாளையம், பிரபு நகரை சேர்ந்த நீலாவதி, 66; வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டு வேலைக்கு வந்து வீட்டு, தனது வீட்டுக்கு செல்வதற்காக, பீளமேடு, வரதராஜா மில் ரோட்டில் உள்ள, பஸ் ஸ்டாப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.லீலாவதியின் மகன் மணிகண்டன், கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ஆம்புலன்சை ஓட்டி வந்தது, சேலம் மாவட்டம், தரமங்கலத்தை சேர்ந்த மதன்குமார், 19 என்பது தெரிய வந்தது. அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், 'எல்.எல்.ஆர்.,' மட்டும் வைத்துக்கொண்டு, ஆம்புலன்சை சேலத்தில் இருந்து கோவைக்கு ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மதன்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
26-May-2025