மேலும் செய்திகள்
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
26-Jul-2025
அன்னுார்; லாரி - பைக் மோதிய விபத்தில் பெண் இறந்தார். சென்னப்ப செட்டிபுதூரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி கமலவேணி, 35. இவர் தனக்குத் தெரிந்த ரஞ்சித் குமார், 32, என்பவருடன், யமஹா பைக்கில், கரியம்பாளையத்திலிருந்து, காரமடை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் கமலவேணி படுகாயம் அடைந்து அன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரஞ்சித் குமார் லேசான காயத்துடன் தப்பினார். அன்னுார் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
26-Jul-2025